இந்த வருடத்தின் முக்கிய பரீட்சைகள் தொடர்பில் சற்று முன்னர் வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!

2021ஆம் ஆண்டு அதாவது இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது. குறித்த பரீட்சையானது இவ்வருடம் அக்டோபர் மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தை கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இதன்படி கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை 2021 அக்டோபர் 4ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதேவேளை ஐந்தாம் வகுப்புக்கான புலமைப்பரிசில் பரீட்சை அக்டோபர் 3ஆம் திகதியன்று நடத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப்பரீட்சை 2022ஆம் ஆண்டு ஜனவரி இறுதி வாரத்தில் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.