பாடசாலையில் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த மாணவி திடீர் மரணம்..!!

வனாத்தவில்லு பண்டாரநாயக்கபுர வித்தியாலத்தில் மாணவி ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளார்.

குறித்த மாணவி, பாடசாலையில் திடீர் சுகவீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.பண்டாரநாயக்கபுர வித்தியாலத்தில் 9ஆம் வகுப்பில் கல்வி கற்கும் வனாத்தவில்லு காட்டுபுளியங்குளம் பிரதேசத்தை சேர்ந்த 14 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த மாணவி வாராந்த பரீட்சை எழுதிக் கொண்டிருந்த நிலையில் சுகயீனமடைந்துள்ளார்.வனாத்தவில்லு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவுடன், குறித்த மாணவி உயிரிழந்துள்ளார்.மாணவி உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என குறிப்பிடப்படுகின்றது.