மகனுக்கு மருமகளாக மணவாளக் கோலத்தில் வந்து நின்ற பெண்!! அதிர்ந்து போன தாய்!! திரைப்படக் காட்சிகளையே விஞ்சிய திருமணம்!!

தனது சகோதரனையே மணப்பெண் ஒருவர் திருமணம் செய்துகொண்ட சம்பவம் சீனாவில் அரங்கேறியுள்ளது. சீனாவில் ஜியாங்க்சு பகுதியில் வசிக்கும் மணமகனுக்கும், மணமகளுக்கும் திருமணம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். சில நிமிடங்களில் திருமணம் நடைபெற உள்ளது என்ற சந்தோஷத்தில் மணமகனும், மணமகளும் இருக்க பூகம்பம் வெடித்தது. திருமணத்திற்குத் தயாரான மணமகளைப் பார்த்த, மணமகனின் தாய்க்கு அதிர்ச்சி ஏற்பட்டது.பிறப்பில் இருந்தே இருக்கும் தழும்பு ஒன்று, மணமகளின் உடலில் இருக்க அதனைப் பார்த்த மணமகனின் தாய், அதிர்ச்சி அடைந்தது மட்டுமின்றி மணமகளின் குடும்பத்தாரிடம் அவரின் உண்மையான தாய், தந்தை குறித்து விசாரித்தார்.

அப்போதுதான் அந்தத் தகவல் அனைவரையும் திடுக்கிடச் செய்ததது.மணமகளை 20 ஆண்டுகளுக்கு முன்பு சாலையோரத்தில் தத்தெடுத்து, தங்களது மகளாக வளர்த்துவந்ததாக அவரின் பெற்றோர் கூறியுள்ளனர்.20 ஆண்டுகளுக்கு முன்பு தனது பெண் குழந்தையை அந்த தாய் தொலைத்துள்ளார். தற்போது அந்த தாயின் மகள் தான் மணமகள் என்று தெரியவந்து.ஆனால், அந்த தாயார் திருமணத்தை நிறுத்தவில்லை! என்ன காரணம் தெரியுமா ? தனது மகள் தொலைந்த சோகத்தில்,அவர் ஒரு ஆண் சிறுவனை தத்தொடுத்து வளர்த்து வந்துள்ளார்.அந்த ஆண் வளர்ந்து வந்து, இந்தப் பெண்ணை காதலித்துள்ளார். வாழ்க்கை என்பது எவ்வளவு ஒரு சிறிய வட்டம் பார்த்தீர்களா ?