வடக்கு மாகாணத்தில் மேலும் எட்டுப் பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறிப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, யாழ்ப்பாணத்தில் ஏழு பேருக்கும் கிளிநொச்சியில் ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.யாழ். போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் 352 பேரின் மாதிரிகள் இன்று (வியாழக்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.இதில், யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ள தனிமைப்படுத்தல் விடுதியில் இருந்த நால்வருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் மூவருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இதேவேளை, கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.