சற்று முன்னர் கிடைத்த விசேட செய்தி..யாழில் மேலுமொரு கொரோனா மரணம்!!

கொரோனா தொற்றினால், மேலும் இரண்டு மரணங்கள் இன்று (8) பதிவாகியுள்ளன.
இதன்மூலம், மரணங்களின் எண்ணிக்கை 593 ஆக அதிகரித்துள்ளது.

தேசிய தொற்று நோய்களின் தேசிய நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்ட தெஹிவளையை சேர்ந்த 70 வயதான ஒருவர் மாரடைப்பு, இரத்தத்தில் விஷம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் கோவிட்-நிமோனியா காரணமாக இன்று மரணமடைந்தார்.கோண்டாவிலை சேர்ந்த 79 வயதான பெண் ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார்.நாள்பட்ட சிறுநீரக நோய், இரத்தத்தில் விஷம், நிமோனியா, நீரிழிவு மற்றும் COVID-19 தொற்று உயிரிழந்தார்.