உங்கள் வீடு சுத்தமாக பளிச்சென இருக்க..செல்வம் பெருக இதை மட்டும் செய்யுங்கள்

“சுத்தம் சுகம் தரும்”என்ற பழமொழி நாம் அனைவருக்கும் தெரிந்தது. நம்வீடு சுத்தமாக இருந்தால் நோய் இல்லாமல் வாழலாம்.வீடு சுத்தம் செய்வது என்பது மிகப்பெரிய வேலையாக தெரியும்.மாசடைந்த சூழல் காரணமாக வீடுகளில் படியும் ஒட்டடை, தூசி போன்றவைகளை அடித்து எடுக்கவே பெரிய வேலையாக இருக்கும்.அன்றாடம் வீடு கூட்டும் போதே அதற்கென சில மணித்துளிகள் ஒதுக்கி வீடுகளை சுத்தம் செய்யவேண்டும். இதனால் வீடு சுத்தமாவதோடு தூசு அலர்ஜி போன்றவைகளில் இருந்தும் உடல்நிலை பாதுகாக்கப்படும். வவேற்பறையை எப்போதும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். வரவேற்பறையில் குப்பை எளிமையாக சேர்ந்து விடும்.ஏனெனில் எல்லா பொருட்களும் அங்கேதான் குவித்து வைக்கப்படும்.

நமக்குத் தேவையான பொருட்களை உபயோகப்படுத்திய பின்னர் அதை குப்பைத் தொட்டியில் போடுவதைப் போல தேவையில்லாத கடிதங்கள், பில்கள் போன்றவற்றை உடனடியாக குப்பையில் போடுவது நல்லது.இதனால் வீட்டில் குப்பை சேராது எளிதாக சுத்தம் செய்யலாம். ஜன்னல்களை திறந்து போட வேண்டும். அப்போது இயற்கையான காற்று உள்ளே புகுந்து கெட்ட வாசனைகள் விலகி போகும்.இரவு படுக்க செல்லும் முன் நாம் கழட்டி போட்ட ஆடைகளை அழுக்கு பை அல்லது கூடையில் போட்டு மூடி வைக்க வேண்டும்.அப்போது கொசு தொல்லையிலிருந்து விடுபடலாம் மட்டுமல்லாமல் துர் வாடைகள் வராமல் தடுக்கலாம்.

பின்பு காலையில் எழுந்ததும் முதலில் படுக்கையறையில் படுக்கையை உதறி மடித்து வைக்கவேண்டும். வாரத்திற்கு ஒருமுறையாவது பெட்டை நகர்த்தி உதறிப் போடவேண்டும். அப்பொழுதுதான் பூச்சிகள் எதுவும் குடித்தனம் புகாமல் இருக்கும்.img src=”https://www.newlanka.lk/wp-content/uploads/2021/04/maxresdefault-28.jpg” alt=”” width=”1280″ height=”720″ class=”alignnone size-full wp-image-39080″ />
சமையலறை சுத்தம்:நாம் அதிகம் பரிமாறும் இடம் சமையலறை. சமைத்து வைத்த பொருள்களை தவறாமல் மூடி வைக்க வேண்டும் சமையல் முடித்ததும் சுத்தம் செய்து விடுங்கள் அப்போது தேவையற்ற ஈக்கள் வருவதை தடுக்கலாம்.இங்கு எண்ணெய் கறை அதிகம் படியும். எனவே அதற்கென உள்ள சுத்தம் செய்யும் பொருட்களை வைத்து சமையல் முடிந்தவுடன் துடைத்துவிட்டால் பளிச் என்று ஆகிவிடும்.மேலும் தேவையற்ற சாமான்களை சமையல் அறையில் இருந்து அப்புறப் படுத்துங்கள் எதையும் சேர்த்து வைத்தால்தான் குப்பை சேரும் கெட்ட வாசனைகளும் வரும் .

சுகாதாரம் பேண வேண்டிய மற்றொரு இடம் குளியலறை, கழிவறைகள்.இது எப்போதும் ஈரப்பதமாக காணப்படுவதால் கெட்ட வாசனைகள் அதிகம் வர வாய்ப்பு உண்டு.ஆகவே எப்போதும் பாத்ரூமை மூடி வைப்பது நல்லது.இவற்றுக்கென்று உள்ள ஆசிட், கிளீனிங் பொருட்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம். இதனால் தொற்றுக் கிரிமிகள் அழிக்கப்பட்டுவிடும். குளியலறையும் சுத்தமாகும்.

பளிச் தரைகள்:தரையைப் பெருக்குகிற போது தினந்தோறும் சுவர்கள் இணையும் இடங்களிலும் ஒட்டடை அடித்தால் வலை கட்டிய சுவர்களைக் காணவே முடியாது. பளிச்சென்று இருக்கும்.அறைகளை துடைக்க நாம் ரசாயனப் பொருட்களை பயன்படுத்துவதை விட பயன்படுத்தாத பழைய ஷாம்பு மற்றும் லெமன் வாசம் வர கூடிய லிக்குய்ட் உபயோக படுத்தி துடைக்கலாம். வீடு பளிச் என்று ஆகும்.