இலங்கை வாழ் அனைத்து இணையப் பாவனையாளர்களுக்கும் பெருமகிழ்ச்சியான செய்தி!! அடுத்த வாரம் முதல் கிடைக்கப் போகும் பெரிய வரப்பிரசாதம்!!

எல்லையற்ற இணைய சேவை பெக்கேஜ் அடுத்த வாரம் முதல் அறிமுகம் செய்யவுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களின் திட்டங்களை முன்வைத்துள்ளன. அந்த திட்டங்களை மீளவும் ஆராய்ந்த பின்னர் அடுத்த வாரம் முதல் அதனை செயற்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் இந்த வாரத்திற்குள் இறுதி தீர்மானத்திற்கு வர முடியும் என எதிர்பார்ப்பதாகவும்,அடுத்த வாரம் முதல் கையடக்க தொலைபேசி பாவணையாளர்களுக்கு அதிவேக இணைய வசதி மற்றும் எல்லையற்ற இணைய வசதியை ஏற்படுத்த முடியும் என ஆணையம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.எப்படியிருப்பினும், இந்த வசதியை வழங்கும் பெக்கேஜின் பெயர்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.