தற்போது கிடைத்த விசேட செய்தி..யாழில் மேலும் 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

யாழ்ப்பாணத்தில் மேலும் 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் பெறப்பட்ட 1003 பிசிஆர் மாதிரிகள், ஸ்ரீஜெயவர்த்தனபுர ஆய்வுகூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இவர்களில் 129 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.இதில், திருநெல்வேலி பாற்பண்ணை பாரதிபுரம் கிராமத்தில் 88 பேரும், புதிய சந்தை தொகுதியுடன் தொடர்புடைய 20 பேர் அடங்கலாக,யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 26 பேருக்கும், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேரும், சங்கானையில் 3 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் திருநெல்வேலி பாற்பண்ணை கிராமத்தில் பாரதிபுரம் என்ற பகுதியில் 88 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 3 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.யாழ்.மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 26 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த தொற்றாளர்களில் 20 பேர் யாழ்ப்பாணம் மாநகர சந்தை மற்றும் கடைத் தொகுதிகளைச் சேர்ந்தவர்கள்.இதன்மூலம் கடந்த 14 நாள்களில் யாழ்ப்பாணம் மாநகர கடைத்தொகுதிகளைச் சேர்ந்த 87 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.