நீங்கள் அறிந்திராத வெண்டைக்காயின் அற்புத பலன்கள்!

நமது அன்றாட உணவில் காய்கள் அதிகம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். உடலுக்கு தேவையான பல சத்துகளை அளிக்க கூடிய காய் வகைகள் ஏராளம் உள்ளன.தினமும் ஒவ்வொரு வகையான காய்கறிகளை நாம் சாப்பிடுவதால் நன்மைகள் அதிகம். அந்த வகையில் நாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அல்லது வராமல் தடுக்க நினைப்பவர்கள் சாப்பிடவேண்டிய காய்கறிகளில் முக்கியமான ஒன்று வெண்டைக்காய் தான், இதை சாப்பிட்டு வர உடலிலுள்ள சர்க்கரையின் அளவு குறையும்.உடல் பருமனாக இருப்பவர்கள் உடம்பில் உள்ள கொழுப்புகளை கரைக்க வேண்டும் என்று எண்ணுவோர் வெண்டைக்காயை அதிகமாக சாப்பிட வேண்டும், அவ்வாறு சாப்பிட்டால் கொழுப்புகள் வெளியேற்றப்படும்.
வெண்டைக்காயில் இருக்கும் பெக்டின் அல்சரை கட்டுப்படுத்துகிறது. இதில் நன்மைத் தரக்கூடிய பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன. இதய நோய்களுக்கும் வெண்டைக்காய் மிகவும் நல்லது, அதிலுள்ள சத்துக்கள் இதயத்திற்கு சென்று வலுவூட்டக் கூடியது வெண்டைக்காயில் அதிகப்படியான கரையக்கூடிய ஃபைபர் இருக்கிறது. அதோடு இது கலோரி குறைவான காய் என்பதால் பயமில்லாமல் சாப்பிடலாம்.

நிறைய பேருக்கு உடல் எடையை விட எலும்புகளின் இடையே அதிகமாக இருக்கும் அதற்கு காரணம் இந்த வெண்டைக்காய் தான். மூச்சு உள் இழுத்தல், வெளியிடுதல் தொடர்புடைய பிரச்சினைகளுக்கும் பயனுள்ளதாக வெண்டைக்காய் உள்ளது.கண்களில் குறைபாடு இருந்தால் வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் கண்பார்வை நன்கு தெரியும், எவ்வித குறையும் இல்லாமல் இருக்கும். கண்பார்வை குறைபாடு வராமல் தடுக்கும்.