பறிபோனது ரஞ்சனின் நாடாளுமன்ற ஆசனம்..!! சற்று முன் வெளியான அறிவிப்பு..!

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், அவரின் பதவி வெற்றிடமாக உள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.