மனைவியின் பாதம் கணவனின் தலைவிதியை சொல்லும்!! தெரியுமா உங்களுக்கு..??

ஒருவர் பிறப்பில் இருந்து இறப்பது வரை என்ன செய்ய வேண்டும் என்னென்ன செய்யக்கூடாது, அவைகளின் பலன்கள் என்ன தீமைகள் என்ன அதற்கான தீர்வுகள் என்ன பரிகாரம் என்ன என்று பலவற்றை அலசி ஆராய்ந்து சாஸ்திரங்கள் இயற்றப்பட்டுள்ளன.சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என பல வடிவில் ஒரு மனிதன் அறிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும் பிரபஞ்சத்தை பற்றியும் இவைகள் ஆராய்ந்துள்ளது.


பண்டைய காலத்தில் பல முனிவர்கள், சான்றோர்கள் சுவடிகளில் கல்வெட்டுகளில் இதை பதிவு செய்து சென்றுள்ளனர். அதில் ஒன்று மனைவியின் கால்களை வைத்து கணவனின் தலைவிதியை பற்றி கூறும் சாமுத்திரிகா சாஸ்திரம்.இது ஆண் மற்றும் பெண் இவர்களுக்கு இடையே உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகள் அதற்கான தீர்வுகள் பற்றி சொல்கிறது. ஐந்து நபர்களாக குறிப்பிடப்பட்டுள்ள கால்களின் ஐந்து விரல்கள் ஐந்து வித்தியாசமான பெயர்களை கொண்டுள்ளது.அது கட்டைவிரல் என்பது அங்குஷ்தா எனவும், இரண்டாம் விரல் தர்ஜானி எனவும், நடுவிரல் மத்யமா எனவும், நான்காம் விரல் என்பது அனாமிகா எனவும், சுண்டுவிரல் என்பது கணிஷ்திகா எனவும் குறிக்கப்படுகிறது.பண்டைய சான்றோர்கள் அர்த்த நாரீஸ்வரர் கொண்டு பெண் இல்லாமல் ஆண் முழுமை அடைவதில்லை என கூறியுள்ளனர். ஆண் மற்றும் பெண் உடலில் இருக்கும் மச்சம், பாதம், கைரேகை போன்றவற்றை வைத்து மற்றவற்றை பற்றி அறியமுடியும் எனவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.உள்ளங்கால்:ஒரு பெண் சக்ரா, த்வாஜா, ஸ்வஸ்திகா போன்ற குறிகளை தன்னுடைய பாதத்தில் உள்ளடக்கி வைத்துள்ளார். இதை வைத்து அவருடைய கணவனின் தலைவிதியை அறிய முடியும். விரல்கள் ஒரு பெண்ணுடைய காலில் இரண்டாம் விரல் மற்ற விரல்களை விட பெரிதாக இருந்தால் கணவனின் நிம்மதி பாதிக்கப்படுமாம்.பெண்ணுடைய காலின் அமைப்பு மலை போல் இருந்தால் மங்களகரமான குணம் படைத்திருப்பார். கணவனுடைய வெற்றிக்கும், உயர்வுக்கும் பக்கபலமாக இருப்பார்.ஒரு பெண் நடக்கும் பொழுது நான்காம் விரல் அனாமிகா, சுண்டுவிரல் கணிஷ்திகா விரல்கள் முழுமையாக தொடாமல் இருந்தால் அவர்கள் நம்பகத்தன்மை இல்லாமல் இருப்பார்கள்.நடுவிரலான மத்யமா விரல் கட்டை விரலை விட நீளமாக இருந்தால் அந்த பெண் மற்றவர்களுக்கு தொல்லை கொடுத்துக்கொண்டு உபத்திரவம் செய்து கொண்டு கவலை அடைய வைத்து கொண்டே இருப்பாள்.மத்யமா, அனாமிகா விரல்கள் ஒரே அளவில் இருந்தால் அவரது கணவருக்கு தொழிலில் நஷ்டம் உண்டாகும். கணவருடன் தேவையில்லாமல் விதண்டாவாதம் செய்து கொண்டே இருப்பார். பெண்ணின் பாதம் வட்டமாக இருந்தால் அவரது கணவரின் வாழ்க்கை வெற்றிகரமாக, இன்பகரமாக அமையும். இப்படி ஒரு மனைவி கிடைக்க நீங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.கட்டைவிரல் இரண்டாம் விரல் மத்தியில் இடைவெளி இருந்தால் வாழ்க்கையில் சில போராட்டங்கள் இருக்கும்.நடுவிரல் கட்டைவிரலை விட பெரியதாக இருந்தால் அவர்கள் காதல் கதை சொல்லி கொள்ளும் அளவுக்கு சிறப்பாக இருக்காது.ஒரு பெண்ணுடைய அனைத்து விரல்களுக்கும் இடையே இடைவெளியானது இருந்தால், அப்படிப்பட்டவர்கள் பண விஷயங்களில் ஊதாரியாக இருப்பார்கள். அதிகம் செலவு செய்து கொண்டே இருப்பார்கள்.தேவையில்லாத பொருட்கள் எல்லாம் இப்படிப்பட்டவர்களுடைய வீட்டில் இருக்குமாம்.