சற்று முன்னர் கிடைத்த செய்தி..யாழில் இன்று 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

யாழ்.மாவட்டத்தில் 21 பேர் உட்பட வடக்கில் இன்று 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன.

இதன்படி இன்று 702 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் வடமாகாணத்தில் 22 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.அவர்களில் 21 பேர் யாழ்.மாவட்டத்தை சேர்ந்தவர்கள், மேலும் ஒருவர் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் கூறுகின்றன.இதில்,யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 8 பேரும், பருத்தித்துறை வைத்தியசாலையில் இருந்து 4 பேரும், யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் இருந்து 3 பேரும், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும்,சண்டிலிப்பாய், தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தலா ஒவ்வொருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டவர்களில் ஒருவர் வைத்தியசாலை ஊழியர். மற்றைய மூவரும் நோயாளர்கள்.