ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி இவர் தான்!! அமைச்சர் சரத் வீரசேகர வெளிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்!!

கடந்த 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள நௌபர் மௌலவி என அடையாளம் காணப்பட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அமைச்சர் சரத் வீரசேகர இதனை குறிப்பிட்டுள்ளார்.சஹ்ரானையும் அவரது ஆதரவாளர்களின் மனதையும் மாற்றி, தாக்குதலை நடத்துவதற்கு நௌபர் மௌலவி தூண்டிவிட்டார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.உளவுத்துறை தகவல்களின்படி, லுக்மான் தாலிப், லுக்மான் தாலிப் அகமட் என்ற தீவிரவாதிகள் 2016 முதல் தாக்குதல்கள் நடக்கும் வரை பல சந்தர்ப்பங்களில் சஹ்ரானை சந்தித்துள்ளனர்.இதில் லுக்மான் தலிப் அகமட் இலங்கையில் பிரசாரங்களை நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

இதேவேளை, சாரா என்பவர் இறந்துவிட்டாரா இல்லையா என்பதை உறுதிப்படுத்த புலனாய்வு துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என அமைச்சர் சரத் வீரசேகர தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.