இலங்கையில் நடைபெற்ற திருமணமான பெண்களுக்கான Mrs. Sri Lanka அழகுராணிப் போட்டியில் அநாகரிகமாக நடந்துகொண்டமைக்காக Mrs. World சர்வதேச அமைப்பு தற்போதைய உலக Mrs. World ஆக திகழும் கரோலின் ஜுரிக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது. Mrs. Sri Lanka அழகு ராணிப்போட்டி கடந்த சனிக்கிழமை கொழும்பு தாமரைத்தடாக அரங்கில்நடைபெற்றது.இதன்போது இறுதிப் போட்டியில் வெற்றிபெற்றதாக ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டு கிரீடம் சூட்டப்பட்ட புஷ்பிக்கா டி சில்வா என்பவர் சில நிமிடங்களின் பின்னர் விவாகரத்தானவர் என அறிவிக்கப்பட்டு, போட்டி விதிமுறைகளின் படி அவரது கிரீடத்தை கழற்றி 2ம் இடம் வந்த பெண்ணிற்கு அணிவிப்பதாக கரோலின் ஜுரி தெரிவித்தார்.இதன் போது கிரீடத்தை கழற்றும் போது அவர் நடந்துகொண்ட விதம் தொடர்பாக திருமணமான அழகு ராணிகளுக்கான Mrs. World அமைப்பு வருத்தம் வெளியிட்டுள்ளது.