இலங்கையில் இப்படியும் நடக்கின்றது..மேடையில் வைத்து மீளப் பெறப்பட்ட தங்கக் கிரீடம்!! (இணையத்தில் வைரலாகும் காணொளி)

கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நடைபெற்ற திருமதி இலங்கை அழகிப் போட்டியில் எதிர்பாராத சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பிலான காணொளி, தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.அத்தோடு இந்த போட்டியில் திருமதி புஷ்பிகா டி சில்வா, வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் மகுடம் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.எனினும், இந்த நிலையில், போட்டியில் பங்குப்பற்றுபவர்கள் திருமணமானராக இருக்க வேண்டுமென்பதுடன், விவாகரத்து பெற்றவராக இருக்க முடியாதென விதிமுறை உள்ளதாக தெரியவருகின்றது.மேலும், இந்த போட்டியில் மகுடம் சூட்டப்பட்ட திருமதி புஷ்பிகா டி சில்வா, ஏற்கனவே திருமணமாகி, விவாகரத்து பெற்றமையினால், இந்த போட்டியில் வெற்றி பெற தகுதியற்றவரென மீண்டும் அறிவிக்கப்பட்டது.அத்தோடு, திருமதி புஷ்பிகா டி சில்வாவிற்கு சூட்டப்பட்ட மகுடம், மேடையிலேயே மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டு, இரண்டாவது இடத்தை பெற்ற திருமதி ருவந்திக்கு மகுடம் சூட்டப்பட்டது.