யாழ்.வடமராட்சியில் தனியாக வசித்து வந்த இளைஞன் திடீர் மரணம்!!

யாழ்ப்பாணம் குடத்தனை பகுதியில் வீட்டில் தனியே தங்கியிருந்த இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

குடத்தனை தரவைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய முகுந்தன் சுலக்சன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.வடமராட்சி பகுதியில் கடந்த 2006 ம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவமொன்றில் படுகாயமடைந்த குறித்த இளைஞர் அடிக்கடி சுகயீனமுற்று சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகின்றது.இந்நிலையில், குறித்த இளைஞர் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் சிகிச்சசை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.