கூரிய ஆயுதத்தால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம் யுவதி..!! தென்னிலங்கையில் நடந்த பதற வைக்கும் சம்பவம்!!

மாத்தளை, கலேவல – பட்டிவல பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
42 வயதான நபரினால் 19 வயதான இளம் யுவதி குத்தி் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளா்ர.தனது 17 வயதான மகளை வயது கூடிய நபரொருவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற காரணத்தால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.தாயை இழந்த 17 வயதான அவரின் மகள் காப்பகமொன்றில் வளர்ந்து வந்துள்ளதுடன், புத்தாண்டு விடுமுறைக்காக வீட்டிற்கு வந்துள்ளார்.கொலை செய்யப்பட்ட பெண் அவரின் உறவினர் என்பதால் அவரது வீட்டில் மகளை தங்க வைத்ததாகவும், அதன்போதே அவர் தனது மகளை வயது கூடிய நபரொருவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்றுள்ளதாகவும், இதனால் ஆத்திரமடைந்து கொலை செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

19 வயதான இளம் யுவதி பணிபுரியும் புத்தக விற்பனை நிலையத்திற்கு சென்று அவரை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.