குடும்பத் தகராறினால் இளம் யுவதி வெட்டிக் கொலை..!! தென்னிலங்கையில் பயங்கரம்..!

கலேவெல, பட்டிவெல சந்தியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் நேற்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

19 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குடும்ப பிரச்சினை காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.