வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 268 பேர் இன்று மீண்டும் இலங்கைக்கு..!!

வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 268 பேர், இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு தொழில் வாய்ப்பிற்காக சென்று, அங்கு பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்து, நாடு திரும்ப முடியாமல் இருந்த 268 இலங்கையர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.குறித்த அனைவரும் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானங்களின் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளனர்.இவ்வாறு வருகை தந்துள்ள அனைவரும், தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.