வடக்கு கல்விச் சமூகத்திற்கு ஓர் மகிழ்ச்சியான அறிவிப்பு..வடக்கில் உதயமாகும் இன்னுமொரு பல்கலைக்கழகம்..!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துடன் இணைந்த வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தலை இம்மாதம் வௌியிடவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
புதிய பல்கலைக்கழகத்தில் தற்போதுள்ள கல்வி பீடங்களுக்கு மேலதிகமாக புதிதாக 02 பீடங்களை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.