தமக்காக கடுமையாக உழைத்த மென்பொருள் பொறியியலாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்!! மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போன ஊழியர்..!!

கடுமையாக உழைத்த ஊழியர் ஒருவருக்கு ஐடி நிறுவனம் கொடுத்த ஒரு பரிசு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.வட இந்தியாவின் பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் இப்தேகர் ரஹ்மானி (Iftekhar Rahmani). தனது பள்ளிப்படிப்பை பெனிபூரில் முடித்த ரஹ்மானிக்கு இன்ஜினீயராக வேண்டும் என கனவு இருந்துள்ளது. இதனால் உதய்பூரில் உள்ள கல்லூரியில் பி.டெக் படித்துள்ளார்.


இதனை அடுத்து நொய்டாவில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் ரஹ்மானிக்கு Software Developer வேலை கிடைத்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள கம்பெனிக்கு ஒன்றுக்கு ரஹ்மானி ஒரு சாஃப்ட்வேர் டெவலப் செய்து கொடுத்துள்ளார். இது அந்த நிறுவனத்துக்கு மிகவும் பிடித்துப்போகவே, ரஹ்மானிக்கு மறக்க முடியாத ஒரு சிறப்புப் பரிசு கொடுக்க நினைத்துள்ளது.அதனால். நிலவில் ரஹ்மானியின் பெயரில் 1 ஏக்கர் இடம் வாங்கி, அவருக்கு பரிசாக கொடுத்து அசத்தியுள்ளது. இந்த இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிப்போன ரஹ்மானி, இதனை தனது தாய் நஸ்ரா பேகமிடம் கூறியுள்ளார். உடனே நஸ்ரா பேகம் தனது குடும்பத்தினருக்கு. இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். கடுமையாக உழைத்து ஊழியருக்கு ஐடி நிறுவனம் நிலவில் இடம் வாங்கிக் கொடுத்த சம்பவம், அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.