பிரித்தானியர்கள் அருந்தும் ஒவ்வொரு கோப்பை தேநீருக்கும் பின்னால் ஒளிந்திருக்கும் பெண்களின் அவல வாழ்வு.!! பேரதிர்ச்சி தரும் செய்தி!

பரதேசி என்றொரு திரைப்படம் தமிழில் வெளிவந்தபோது அதைப் பார்த்து அதிர்ச்சியடையாதவர்கள் குறைவு.

தேயிலைத் தோட்டங்களில் சூறையாடப்படும் பெண்கள், தாக்கப்படும் ஆண்கள், சிறுவயதில் வேலை செய்யும் நிர்பந்தத்துக்காளாவோர்,மோசடி செய்து சம்பளமே கொடுக்காமல் ஏமாற்றும் மேலாளர்கள் என, நடக்கும் அராஜகங்கள் ஒவ்வொன்றும் காண்போரை கொதிப்படையச் செய்ததை மறக்கமுடியாது.தற்போது, அந்த திரைப்படத்தில் காட்டப்பட்ட காட்சிகளையொத்த அராஜகங்கள் அடங்கிய ஒரு செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேயிலைத் தோட்டம் ஒன்றில் வேலை செய்யும் கிரேஸை அணுகிய அவரது மேலாளர் ஒருவர், தன்னுடன் பாலுறவு கொள்ளுமாறு மூன்று முறை வற்புறுத்த, மூன்று முறையும் மறுத்துள்ளார் கிரேஸ்.அதனால், எப்போது வேண்டுமானாலும் தன் வேலை பறிபோகலாம் என்று கிரேஸ் பயந்துகொண்டிருந்த நிலையில், அவர் எதிர்பாராத ஒரு பயங்கரத்தை அவர் சந்திக்கவேண்டி வந்தது.வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த கிரேஸை பின் தொடர்ந்த அந்த மேலாளர், ஆளரவமற்ற ஒரு இடத்தில் வைத்து அவரை வன்புணர்ந்துள்ளார்.அந்தப் பகுதியில் ஆளே இல்லை என்பதால், அவர் போட்ட சத்தம் யார் காதிலுமே விழாமல் போய்விட்டிருக்கிறது.அதனால் கர்ப்பமுற்ற கிரேஸ், தனக்கு ஹெச்.ஐ.வி தொற்றும் ஏற்பட்டுள்ளதை அறிந்து கதிகலங்கிப்போனார். இந்தச் சம்பவம் நடந்தது, பிரித்தானியாவுக்கு தேயிலை ஏற்றுமதி செய்யும் Malawiயிலுள்ள Lejuri எஸ்டேட்டில்.கிரேஸின் புகாரைத் தொடர்ந்து, அந்த எஸ்டேட்டின் உரிமையாளர்களான பிரித்தானியர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.அந்த எஸ்டேட்டில் மேளாளர்களாக பணியாற்றுவோர் மீது 10 வன்புணர்வுக் குற்றச்சாட்டுகள் உட்பட, 31 பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த செய்தி வெளியானதும், பிரித்தானிய நிறுவனங்களான Marks & Spencer, Tesco, Co-op மற்றும் Sainsbury’s ஆகிய நிறுவனங்கள் Lujeri எஸ்டேட்டிலிருந்து தேயிலை வாங்குவதை நிறுத்திவிட்டன.இது ஒரு சின்ன கொசுறுதான், பிரித்தானியர்கள் நாளொன்றிற்கு 165 மில்லியன் கோப்பை தேநீர் அருந்துகிறார்கள். PG Tips, Twinings, Tetley, Yorkshire, Typhoo, மற்றும் Clipper என்னும் ஆறு தேயிலை நிறுவனங்கள் ஆண்டொன்றிற்கு சுமார் 500 மில்லியன் பவுண்டுகளுக்கு தேநீர் வியாபாரம் செய்கின்றன.

ஆனால், பிரித்தானியர்கள் விரும்பி அருந்தும் ஒவ்வொரு கோப்பை தேநீருக்கும் பின்னால் சூறையாடப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்வோ, ஒரு சிறு பிள்ளையின் துஷ்பிரயோகமோ, ஏதோ ஒரு மனித உரிமை மீறல் இருப்பதை மறுப்பதற்கில்லை.இது ஒரு நாட்டிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் மட்டும் நடக்கும் அராஜகம்தான்.
இதேபோல், ஆப்பிரிக்கா, இந்தியா, பங்களாதேஷ் என பல நாடுகளில் பல அக்கிரமங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. தந்தையும் தாயும் இறந்ததால் பள்ளிக்குச் செல்லமுடியாமல் தேயிலைத்தோட்டங்கள் நாளெல்லாம் வேலை செய்தும், வெறும் 20 பென்னிகள் மட்டுமே ஊதியம் பெறும் சிறுவர் சிறுமிகள்,புழுத்த அரிசியும், கசக்கும் கோதுமை மாவும் சாப்பிட்டு வேலை செய்யும் ஆண்கள்,மருத்துவச் செலவுக்கு பணம் இல்லாததால், நாய்க் கடிபட்ட பிள்ளை இன்று சாகுமா நாளை சாகுமா என தெரியாமல் விழிக்கும் தாய்,பிரசவத்துக்கு மருத்துவமனை இல்லாமல் எங்கோ பல மைல்கள் நடந்தே பயணிக்கவேண்டிய கர்ப்பிணிகள், ஒன்றுக்கும் இரண்டுக்கும் ஒதுங்க இடமில்லாமல், தேயிலைத் தோட்டத்துக்குள்ளேயே ஆள் வருகிறதா என்று பதற்றத்துடனேயே ஒதுங்கும் பெண்கள்,பேதி ஆன நிலையிலும், கழிவறை இல்லாமல் ஒதுங்க இடம் தேடி அலையும் பிள்ளைகள், நல்ல வேலை தருவதாக ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படும் பெண்கள்,வறுமையால் பெற்றோராலேயே விற்கப்படும் பிள்ளைகள், என தேயிலைத் தோட்டங்களில் நடக்கும் ஒவ்வொரு கதையாக படிக்க படிக்க, தேநீர்க் கோப்பையை கையில் எடுத்தாலேயே மனம் பதறுகிறது.