தற்போது கிடைத்த விசேட செய்தி..இலங்கையில் இன்று மட்டும் 08 பேர் கொரோனாவினால் மரணம்.!!

நாட்டில் இன்று மாத்திரம் 8 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 579 ஆக அதிகரித்துள்ளது.அதன் படி இன்று மாலை 4 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று சனிக்கிழமை இரவு 7.30 மணி வரை 98 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் நாட்டில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 93 ஆயிரத்தை கடந்துள்ளது.இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 90 021 பேர் குணமடைந்துள்ளதோடு , 2630 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் ,இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தால் 4 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.அந்த குறித்த மரணங்களின் விபரம் வருமாறு,இகிரிய பிரதேசத்தை சேர்ந்த 86 வயதுடைய பெண்ணொருவர் கொவிட் நிமோனியாவால் கடந்த முதலாம் திகதி கண்டி போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடைய ஆண்ணொருவர் கொவிட் நிமோனியாவுடன் ஏற்பட்ட சுவாச கோளாரினால் கடந்த முதலாம் திகதி முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.புவக்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 87 வயதுடைய ஆண்ணொருவர் கொவிட் நிமோனியா, இரத்தம் நஞ்சானமை, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் என்பவற்றால் கடந்த முதலாம் திகதி முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.கொழும்பு 14 ஐ சேர்ந்த 90 வயதுடைய ஆண்ணொருவர் இரத்தம் நஞ்சானமை , கொவிட் நிமோனியா என்பவற்றால் மார்ச் 31 ஆம் திகதி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.இதேவேளை, இன்று மாலை அரசாங்க தகவல் திணைக்களத்தின் படி மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.அதன்படி, அக்குறணை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய பெண்ணொருவரும், ரம்புக்கணை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஆண்ணொருவரும், கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய ஆண்ணொருவரும் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணொருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.