மூன்று கோடி பேரில் ஒருவருக்கு மட்டும்தான் கொரோனா!! உலகத்தையே வியக்க வைத்த நாடு..!!

3 கோடி சனத்தொகையை கொண்ட ஏமன் நாட்டில் ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று ஏற்பட்டு அவரும் குணமடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏமனில் ஹட்ராமொண்ட் மாகாணம் அஷ் ஷஹூர் நகரை சேர்ந்த 60 வயதுடைய அரசு அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் கடந்த 10 ஆம் திகதி உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மேலும், வைரஸ் பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினரை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த மருத்துவத்துறையினர் முற்பட்டனர்.ஆனால், அந்த குடும்பத்தினர் யாரும் வைரஸ் பரிசோதனை செய்ய முன்வரவில்லை. இதனால், அவர்கள் அனைவரும் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.மேலும், வைரஸ் உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்த 120 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் யாருக்கும் வைரஸ் தொற்று பரவவில்லை. இதனால் ஒட்டுமொத்த ஏமனிலும் அந்த ஒரு அரசு அதிகாரிக்கு மட்டுமே கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அந்த அரசு அதிகாரி நேற்று குணமடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து வீடு சென்றுள்ளார்.மேலும், வைரசில் இருந்து குணமான நபரின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு 21 நாட்களும் முடிவடைந்தது.இதனால், கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத நாடாக ஏமன் மாறியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வைரஸ் பாதிப்பில் இருந்து ஏமன் மீண்டு வந்துவிட்டதாக அந்நாடு அதிகாரிகள் தெரிவித்தபோதும் 3 கோடி மக்கள் தொகையை கொண்ட நாட்டில் ஒட்டுமொத்தமாக 120 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதால் இந்த தகவலின் உறுதித்தன்மை குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.அத்துடன் உள்நாட்டுப் போரால் அதிக பாதிப்புகளை சந்தித்த ஏமனில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் வைரஸ் பரவல் அதிகரித்தால் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தலாம் என அச்சம் எழுந்தமையும் குறிப்பிடத்தக்கது.