மைசூர் பருப்பில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனம்!! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வெலிகம பல்நோக்கு கூட்டுறவு சங்க விற்பனை நிலையத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட பருப்பில் Aflatoxin இரசாயனம் அடங்கிய புற்றுநோய்க் காரணி கண்டறியப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கையினூடாக இதனை உறுதி செய்ததாக வெலிகம பிராந்திய பிரதம பொது சுகாதார பரிசோதகர் M.M.H.நிஹால் தெரிவித்துள்ளார்.அத்தோடு குறித்த பல்நோக்கு கூட்டுறவு சங்க விற்பனை நிலையத்தில் இருந்து காலாவதியான, நுகர்விற்கு பொருந்தாத 3150 கிலோகிராம் பருப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.மேலும், காலாவதியான யோகட் விற்பனை செய்யப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து, இந்த விற்பனை நிலையத்தில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.எனினும், தேங்காய் எண்ணெயில் Aflatoxin கலந்திருப்பது கண்டறியப்பட்டு, அது குறித்தான சோதனைகள் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், புற்றுநோயை உண்டாக்கும் Aflatoxin பருப்பிலும் கலந்திருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.மேலும், நுகர்வோருக்கு இது சுகாதார பாதிப்பை ஏற்படுத்தும் என பிரதம பொதுச்சுகாதார பரிசோதகர் M.M.H.நிஹால் சுட்டிக்காட்டினார்.