இலங்கையில் 93 000 ஐ கடந்த கொரோனா எண்ணிக்கை

இலங்கையில் மேலும் 120 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 93 000 ஐ கடந்துள்ளது.


இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 93,037 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.