ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற நபருக்கு நேர்ந்த சோகம்..ஆட்களின்றி துறைமுகத்தை வந்தடைந்த படகு..!

திருகோணமலை கொட்பே துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் கடலில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

உயிரிழந்த நபர் கடந்த 25 ஆம் திகதி துவா என்ற படகிலேயே மீன் பிடிக்கச் சென்றுள்ளார். இவ்வாறு மீன் பிடிக்கச் சென்றவர் திருகோணமலை ஆண்டாம்குளம் பகுதியைச் சேர்ந்த கலப்பதி ஆராச்சிகே ராண்டி ரதீசா லக்சான் என்பவர் எனவும் இவர் மார்ச் 31 ஆம் திகதி கடலில் விழுந்து உயிரிழந்ததாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.இந்நிலையில், அவர் பயணித்த படகு இன்று திருகோணமலை கொட்பே துறைமுகத்தில் வந்தடைந்துள்ளது. அதனையடுத்து அப்பகுதியில் ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.அதனையடுத்து உடனே பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு படகு பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
அத்துடன் படகில் சென்ற மற்ற மூன்று நபர்களையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.