தமது திருமணச் செலவிற்கு வைத்திருந்த பணத்தை கொரோனாவினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பத்திற்கு வழங்கிய ஜோடி…!!

மாத்தறை மாவட்டத்தில் நடந்த திருமணமொன்றை தொடர்ந்து, தமது திருமணச் செலவிற்காக வைத்திருந்த பணத்தை வறிய மக்களிற்கு உணவுப் பொருட்கள் வழங்க செலவிட்டுள்ளனர்.மாலிம்பத பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்த பகுதியை சேர்ந்த தர்சன குமார, டிக்வெலவை சேர்ந்த பவானி ரசங்கிகும் மிக எளிமையாக அண்மையில் திருமணம் நடந்தது. இரு தரப்பு உறவுகளென சுமார் 10 பேர் வரை நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.தமது திருமணத்தை பெருமெடுப்பில் நடத்த இந்த ஜோடி திட்டமிட்டிருந்தது. எனினும், கொரோனா அனர்த்தத்தையடுத்து, எளிமையாக திருமணத்தை ஏற்படுத்த வேண்டிய நிலைமையேற்பட்டது.இதையடுத்து தமது திருமணத்தை எளிமையாக நடத்திய இந்த ஜோடி, திருமணத்திற்காக சேமித்து வைத்த பணத்தில் ஒரு பகுதியில், மாலிம்பத பகுதியிலுள்ள வறிய மக்களிற்கு உதவிப்பொருட்களை வழங்கியுள்ளனர்.