2 லட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் யாழில் சிக்கிய குடும்பத் தலைவர்..!!

50 கிராம் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்ததாக குடும்பத்தலைவர் ஒருவர் காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெல்லிப்பழை கட்டுவனைச் சேர்ந்த 49 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையே இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஒரு மணியளவில் கைது செய்யப்பட்டார் என்று தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.சுமார் 2 லட்சம் ரூபாய் பெறுமதியான 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் சந்தே நபரிடம் கைப்பற்றப்பட்டது. அவர் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் கூறினர்