இலங்கையில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா தொற்று..!! 93 ஆயிரத்தை நெருங்கும் நோயாளிகள்!!

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 92 ஆயிரத்து 831 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை மேலும் 156பேர் குணமடைந்துள்ள நிலையில், தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 89 ஆயிரத்து 407 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை தொற்று உறுதியானவர்களில் 2 ஆயிரத்து 856 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 568 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.