தற்போது கிடைத்த செய்தி..அபாயக் கட்டத்தை நோக்கி யாழ்ப்பாணம்..மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 23 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதில் ஒருவர் காங்கேசன்துறை கடற்படை முகாமை சேர்ந்தவர்.இன்று 778 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இதில் யாழ் போதனா வைத்தியசாலையில் 6 பேர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர், யாழ் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்.கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேர், காங்கேசன்துறை கடற்படை முகாமில் ஒருவர்,தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ். மாநகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 7 பேரின் மாதிரிகள் நேற்றைய பரிசோதனையில் முடிவைக் கண்டறிய முடியவில்லை என அறிக்கையிடப்பட்டது. அவர்களிடம் இன்று மீளவும் பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட போது அதில் ஒருவருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.கல்வியங்காடு பொதுச் சந்தை வியாபாரிகளிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் இருவருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.நல்லூர் பிரதேச சபையின் சுகாதாரத் தொழிலாளிகளில் திருநெல்வேலி சந்தையில் பணியாற்றும் மூவருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.மேலும், திருநெல்வேலி சந்தை வியாபாரி ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.யாழ். போதனா வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தர் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.