பதவிநிலைகளில் இல்லாத அரச ஊழியர்களுக்கு 5,000 ரூபா உதவிக் கொடுப்பனவு..!!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையிலும் கூட அரச உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாக சேவைகளை வழங்கி வருகின்ற நிலையில், பதவிநிலை அல்லாத உத்தியோகத்தர்களுக்கு 5 ஆயிரம் ரூபா உதவிக் கொடுப்பனவை வழங்க நாளை இடம்பெறும் அமைச்சரவைக்கு முன்மொழிவை முன்வைக்க உள்ளதாக பொது நிருவாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபை அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார்.தம்புள்ளயில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது; பதவிநிலை அல்லாத உத்தியோகத்தர்களுக்கு 3 மாதங்களுக்கு (15/3/2020 – 15/06/2020) இவ்வாறான கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.மத்திய மற்றும் மாகாண சுகாதார துறை ஊழியர்கள், மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலக ஊழியர்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபை ஊழியர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.கிராம சேவகர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவாக ஒரு பிரிவை கண்காணிப்போருக்கு 400 ரூபாயும் இரண்டு பிரிவை கண்காணிப்போருக்கு 600 ரூபாயும் வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.கிராம சேவகர்களுக்கு தொலைபேசி கொடுப்பனபாக 600 ரூபாய் வழங்கப்படுகிறது. அதனை ஆயிரத்து 500 ரூபாயாக வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
கிராம சேவகர்களுக்கௌ போக்குவரத்து கொடுப்பனவாக ரூ 600 ரூபாய் வழங்கப்படுகிறது. அதனை ஆயிரத்து 200 ரூபாயாக வழங்க முன்மொழியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட கடுமையாக உழைக்கும் அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஒரு கொடுப்பனவை வழங்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன் இராமநாதன், பொது நிருவாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனுக்கு கடிதம் மூலம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன், இவ்வாறான கொடுப்பனவு பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கும் வழங்கபட வென்றும் என்று கேட்டுகொண்டுள்ளார்.