மதம் கடந்து மக்களை நேசிக்கும் பௌத்த துறவிக்கு வாழ்த்துக்கூறும் பலர்!

தமிழ் மக்களுக்காக உண்மையாக இதய சுத்தியோடு குரல் கொடுக்கும் நடமாடும் ரதன தேரர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என பலரும் வாழ்த்துக்க:ளை கூறிவருகின்றனர்.

மதம் கடந்து நல்லதொரு ஓர் ஆத்மீகத் துறவி ரதன தேரர். இவர் இளம் வயதில் துறவறம் பூண்டு இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள தமிழ் மக்களுடன் இதய சுத்தியுன் உறவைப் பேணி வருகின்றார்.

அத்துடன் தமிழ் மக்கள் சமகாலத்தில் படும்முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக சவால்களைக் கண்டு மனம் வருந்தி உண்மையை உணர்ந்துள்ள துறவி இவராவார்.

துறவறம் பூண்டு ஏனைய மக்களின் மனங்களைப் புண்படுத்திக் கொண்டிருக்கும் பௌத்த துறவிகள் மத்தியில் இவர் ஒரு உன்னதம் என்றும் போற்றுகின்றனர்.

தமிழ் மீது கொண்ட பற்றினால் சரளமாக தமிழ் மொழி பேசும் இவர் ஹொரணைப் பகுதியொன்றிலுள்ள பாடசாலையில் தமிழ் ஆசிரியராகக் கடமை புரிந்து கொண்டிருக்கிறார்.

அவருடனான கருத்துப் பகிர்விலிருந்து அறியப்பட்டதொன்று என்னவென்றால் தமிழர்களும் சிங்களவர்களும் மொழியால் மட்டுமே வேறுபாடு கொண்டவர்கள் என்றும் இலங்கை வரலாற்றில் இரு இனத்தவரும் அன்புடனும் ஒற்றுமையாகவும் வாழ்ந்து வந்தபோது குறுகிய மனப்பான்மை கொண்ட சில அரசியல் வாதிகளே தங்கள் சுயநலத்திற்காக பிரித்தாண்டு கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை கூறி அவர் கவலையடைந்தார்.

இந்நிலையில் ஓர் ஆன்மீகவாதி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் குறித்த தேரருக்கு வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.

முகநூல் பதிவிலிருந்து……