மனைவியை கழுத்து நெரித்துக் கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்…!! கிளிநொச்சியில் பயங்கரம்..!! அநாதரவான மூன்று பிள்ளைகள்..!

கிளிநொச்சி – பரந்தன், சிவபுரம் பகுதியில் வீடொன்றுக்குள் கணவனும், மனைவியும் சடலங்களாக கிடந்துள்ளனர்.குறித்த சம்பவம் இன்று பிற்பகல் பதிவாகியுள்ளது. மனைவி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ள அதேவேளை கணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்படுவதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த பின்னர் கணவன் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இணைப்பு:02:கிளிநொச்சியில் மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன் தானும் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சிவபுரம் பகுதியில் இன்று நடைபெற்றது.குடும்பத்தகராறு காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்3பிள்ளைகளின் பெற்றோரான வேலாயுதம் சிவஞானம் வயது 38, சிவஞானம் குகனேஸ்வரி வயது 36ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.இச்சம்பவத்தினால் 16, 13, 6 வயதுடைய மூன்று பிள்ளைகள் அநாதையாகியுள்ளனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.