அனைத்து இலங்கையர்களுக்கும் மிக முக்கியமான தகவல்..அடுத்த இரு வாரங்களில் கிடைக்கும் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி..!!

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்பூட்னிக்-வி கொரோனா தடுப்பூசி இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் இலங்கையை வந்தடையும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், நாட்டில் ஒக்ஸ்போர்ட் / அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி, சினோபோர்ம் மற்றும் ஸ்பூட்னிக்-வி ஆகியவை இந்த மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என கூறினார்.

ஒக்ஸ்போர்ட் / அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதாக உலகம் முழுவதும் பதிவாகின்றபோதும் இலங்கையில் பக்க விளைவுகள் குறைவாகவே காணப்படுவதாகவும் அவர் கூறினார்.மேலும் குறித்த தடுப்பூசி தொடர்பான ஆராச்சியினை அனைத்து தரப்பினரும் மேற்கொண்டுவருவதாகவும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.இதேவேளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட சினோபோர்ம் தடுப்பூசியின் 600,000 டோஸ் ஆரம்பத்தில் நாட்டில் உள்ள சீனர்களுக்கு வழங்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டார்.அவசரகால பயன்பாட்டிற்காக சினோபோர்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு இன்னும் அங்கீகாரம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.