கொரோனாவினால் உயிரிழந்த மனைவி..சோகத்தை தாங்க முடியாமல் 13 நாளில் உயிரைவிட்ட கணவன்..!! யாழில் பெரும் சோகம்..!!

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால் மனைவி உயிரிழந்து விட, அவரது முகத்தை கூட பார்க்க முடியாத சோகத்தில் கணவனும் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

நயினாதீவு, 6ஆம் வட்டாரத்தை சேர்ந்த பெண்ணொருவர் நோய் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 17ஆம் திகதி உயிரிழந்தார்.அவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.அவரது சடலம், குடும்பத்தினருக்கும் காண்பிக்கப்படாமல் தகனம் செய்யப்பட்டது.இதனால்,அவரது கணவன் மிகுந்த விரக்தியில் இருந்துள்ளார். தனது மனைவியின் முகத்தை கூட பார்க்க முடியவில்லையே என உறவினர்களிடம் கூறி தினமும் வெதும்பிக் கொண்டிருந்தார்.இந்த நிலையில், மனைவி உயிரிழந்த 13ஆம் நாள், கணவனும் திடீரென உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.