ஆழ்மனதிலிருந்து இதய அஞ்சலிகள்

ஈழத்தமிழருக்காக சர்வதேசமெங்கும் ஓங்கி ஒலித்த குரல் ஓய்ந்து போனது.
மன்னார் மறை மாவட்ட ஓய்வு நிலை ஆயர், அதி வணக்கத்துக்குரிய கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களுக்கு ஈழத்தமிழரின் இதய அஞ்சலிகள்.

யுத்தகாலத்தில் மக்களுக்காக இடையறாது தனது சேவையை வழங்கியவர்.தமிழ் மக்களின் உரிமைக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்தவர்.தமிழ்த்தேசியத்தின்பால் இவர் கொண்ட பற்றுறுதி போற்றுதற்குரியது.மனித உரிமைமீறல்களுக்காகவும், ஈழத்தில் நடந்தது இனப்படுகொலையெனவும் வாதாடியவர்.திரு.இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவு தமிழ்த்தேசியத்தை நேசிக்கும் தமிழ் மக்களுக்கு பேரிழப்பாக இருக்கும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.
அன்னாரின் மறைவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.”ஆயர் தனது மந்தைகளைக் காப்பதுபோல எம் இனத்தைக்காக்க ஓங்கி ஒலித்த குரலுக்கு நித்திய ஆன்ம இளைப்பாற்றியைக் கொடுத்தருளும் இறைவா..ஒரு கிறிஸ்த்தவராக பெரியவியாழனில் உயிர் இயற்கையோடுகலக்கும் பேறு பெற்றார்.ஆழ்மனத்திலிருந்து இதய அஞ்சலிகள் ஆண்டகையே!