கொரோனா நேரத்தில் கடுமையாக உழைக்கும் அரசாங்க ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி..!!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையிலும் கூட அரச உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாக சேவைகளை வழங்கி வருகின்ற நிலையில், பதவிநிலை அல்லாத உத்தியோகத்தர்களுக்கு அரசாங்கம் பல்வேறு கொடுப்பனவுகளை வழங்க உள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபை அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார்.தம்புள்ளயில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,பதவிநிலை அல்லாத உத்தியோகத்தர்களுக்கு 3 மாதங்களுக்கு (15/3/2020 – 15/06/2020) விசேட இடர்கால கொடுப்பனவு வழங்கப்படவுள்ளன.மத்திய மற்றும் மாகாண சுகாதார துறை – ரூ 5000,மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலக ஊழியர்கள் – ரூ 5000,மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபை ஊழியர்கள் – ரூ 5000,கிராம சேவகர் எரிபொருள் கொடுப்பனவு: ஒரு பிரிவை கண்காணிப்போருக்கு ரூ 450/ இரண்டு பிரிவை கண்காணிப்போருக்கு ரூ 600.
கிராம சேவகர் தொலைபேசி கொடுப்பனவு: ரூ 600 வழங்கப்பட்டது, தற்போது ரூ 1500 ஆக அதிகரிக்கப்படுகிறது.கிராம சேவகர் போக்குவரத்து கொடுப்பனவு: ரூ 600 வழங்கப்பட்டது, தற்போது ரூ 1200 ஆக அதிகரிக்கப்படுகிறது.கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட கடுமையாக உழைக்கும் அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஒரு கொடுப்பனவை வழங்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பொது நிருவாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனுக்கு கடிதம் மூலம் கோரிக்கை ஒன்றை முன்வைத்ததன் அடிப்படையில் இவ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன..இக் கருத்தை உண்மையில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக அரச உத்தியோகத்தர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.