யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தர் செய்த செயல்!! குவியும் பாராட்டுக்கள்..

யாழில் உணவின்றி தவித்த ஒருவருக்கு தமிழ் பொலிஸார் ஒருவர் உணவளித்த காட்சி மனதை பலர் மனதை தொட்டுள்ளது.கொரோனா அச்சம் காணமாக முடக்கத்தில் உள்ள யாழ் நகர மத்திய பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


கொரோனா முடக்கத்தினால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய யாழ் நகர பகுதியொன்றில் உள்ள சித்த சுவாதீனமற்ற குறித்த நபருக்கு உணவு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், அந்த நபருக்கு பொலிஸ் உத்தியோகத்தர் உணவு வழங்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவிவரும் நிலையில், குறித்த உத்தியோகத்தருக்கு பலரும் பாராட்டுக்களை கூறி வருகின்றனர்.