இலங்கை வாழ் கர்ப்பிணி தாய்மார்களுக்கான முக்கியமான அறிவிப்பு.. சற்று முன்னர் வெளியான அறிக்கை..!

கொரோனா வைரஸ் தாக்கம் இலங்கையில் அதிகரித்துள்ள நிலையில, கர்ப்பிணி தாய்மார்களுக்கு கீழ் வரும் நோய்கள் காணப்பட்டால் தாமதிக்காது வைத்தியர்களிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய கர்ப்பிணி பெண்கள் காய்ச்சல், இரத்தப்போக்கு, கடுமையான தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், பார்வைகுறைப்பாடு, வலிப்பு, நெஞ்சு அல்லது வயிற்று வலி, சிசுவின் அசைவில் மாற்றம், உடல் வீக்கம், மற்றும் தலைவலி உள்ளிட்ட வேறு ஏதேனும் கடுமையான அசௌகரியம் காணப்படுமாயின் கர்ப்பிணி பெண்கள் உடனடியாக மருத்துவ மனையில் சிகிச்சை பெறவேண்டும் என பணிக்கப்பட்டுள்ளது.அத்துடன், தரமான சேவையை பெற்றுக்கொள்ளவும், மருத்துவமனைகளில் நெரிசலைக் குறைக்கவும் மாதாந்த சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளும் கர்ப்பிணிப்; தாய்மார்கள் முற்பதிவுகளை செய்யும்மாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க கோரியுள்ளார்.இதேவேளை நேற்று அடையாளம் காணப்பட்ட 65 பேருடன் நாட்டில் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 588 ஆக அதிகரித்துள்ளாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.இதுவரை 126 பேர் சிகிச்சைகளின் பின்னர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், 455 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.