சற்று முன்னர் கிடைத்த செய்தி..யாழில் மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மேலும், 22 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.


யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 755 பேரின் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.இதில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 7 பேர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை, கண்டாவளை ஆதார வைத்தியசாலை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வந்த தலா ஒவ்வொருவர்.யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், யாழ் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்2 பேர், யாழ் பல்கலைகழக மாணவன் ஒருவர் இன்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.