தனது வித்தியாசமாமான கடினமான முயற்சியினால் ஏலியன் போல தன்னை உருமாற்றிக் கொண்ட இளைஞன்..!!

வேற்றுக் கிரகவாசியாக தன்னை உருமாற்றிக் கொள்வதற்காக, தனது மூக்கு, காது, உதடு , நாக்கு போன்றவற்றை அறுத்துக் கொண்ட இளைஞனின் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றார்.

பிரித்தானியாவில் பார்ப்பதற்கே விசித்திரமாக, அறுக்கப்பட்ட சிறிய காதுகள், மூக்கு, வெட்டப்பட்ட உதடுகள் மற்றும் இரண்டாக பிளக்கப்பட்ட நாக்குடன் ஹாலிவுட் படங்களில் சித்தரிக்கப்படும் ஏலியன் போன்று தன்னை முழுவதுமாக 32 வயதான Anthony Loffredo உருமாற்றிக் கொண்டுள்ளார்.அதுமட்டுமின்றி பயங்கரமாக தோற்றமளிக்கும் அவர் தனக்கு தானே வைத்துக்கொண்ட பெயர் ‘Black Alien’.பெயருக்கு ஏற்ப கண்கள் உடன்பட அவரது உடல் முழுவதிலும் டாட்டூ வரைந்து கொண்டு கருப்பாக மாறியுள்ளார்.கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக தன்னை உருமாற்றம் பணியில் அவர் ஈடுபட்டுவந்துள்ளார்.அதற்கு அவர் வைத்த பெயர் Black Alien Project.ஒவ்வொரு முறை சிறு சிறு மாற்றங்களை செய்து வந்த Loffredo, அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுவந்துள்ளார்.இதனால், அவருக்கு 345,000 ஃபாலோவர்ஸ் குவிந்துள்ளனர்.இது தனது நீண்டநாள் ஆசை என்றும் அவர் கூறுகிறார்.எனினும், அறுபட்ட மூக்கு மற்றும் இரண்டாக பிளவுபட்ட அணைக்குடன் தன்னால் இயல்பாக முன்பு இருந்ததை போல பேச முடியவில்லை என்றாலும், தனது புதிய தோற்றத்துக்காக பெருமைப்படுவதாக கூறுகிறார் Loffredo.வேற்று கிரகவாசிகளை பார்த்து பயந்த காலம் கடந்து, தற்போது மனிதர்களே வேற்று கிரகவாசிகள் போல தம்மை உருமாற்றுவது வேடிக்கையாக உள்ளது.