கொரோனா வைரஸ் தொடர்பில் அரசாங்கம் மீது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பகிரங்க குற்றச்சாட்டு..!!

கொரோனா வைரஸ் தொற்றுக் குறித்த தகவல்களை அரசாங்கம் மூடி மறைப்பதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. கொரோனா எனப்படும் கொவிட்-19 வைரஸ் தொற்று தொடர்பிலான சில தகவல்களை அரசாங்கம் மறைத்து வருவதாக, சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
வைரஸ் தொற்றினால் தாக்கப்பட்டவர்கள் தொடர்பு பேணிய நபர்கள் குறித்த தகவல்களை அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த நபர்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு சுகாதார அமைச்சரிடம் கடந்த ஒரு மாத காலமாக தகவல்களை கோரியிருந்த போதிலும் இதுவரையில் தகவல்கள் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.பரிசோதனைகளுக்கு தேவையான சாதனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முன்னதாக உரிய தரப்புக்களுக்கு அறிவிக்காத காரணத்தினால் அனைத்து பரிசோதனை நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.இவ்வாறு சில தகவல்களை அரசாங்கம் மூடி மறைப்பதாக தமது சங்கத்தின் சந்தேகம் எழுந்துள்ளதாக டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.