கோவிட் முதலாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு..இரண்டாவது கட்டம் விரைவில் ஆரம்பம்..!!

கோவிட் – 19 நோய்த் தொற்றுக்கான தடுப்பூசியின் இரண்டாம் மருந்தளவு (dose) விநியோகம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சின் தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு இந்த விடயத்தை அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி கொவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாம் மருந்தளவு விநியோகம் ஆரம்பிக்கப்பட உள்ளது.தடுப்பூசியின் இரண்டாம் மருந்தளவினை வழங்குவதற்கு, போதியளவு தடுப்பூசி கையிருப்பில் காணப்படுவதாக பிரதம தொற்று நோயியல் நிபுணர் டொக்டர் சுதத் சுமரவீர தெரிவித்துள்ளார்.கொவிஷீல்ட் தடுப்பூசி இரண்டு தடவைகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.