தற்போது கிடைத்த செய்தி..வடக்கில் இன்று 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

வடமாகாணத்தில் இன்று 26 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.வடமாகாணத்தில் இன்று 382 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதில் 26 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் யாழ்.மாவட்டத்தில் 21 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 02 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 02 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, திருநெல்வேலி பொதுச்சந்தை மற்றும் அதனைச் சூழவுள்ள வர்த்தக நிலையங்களோடு தொடர்புபட்ட 177 பேருக்கு இம்மாதம் இதுவரை கோவிட் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.