இந்தியாவிலும் கோரத் தாண்டவமாடும் கொரோனா….முதல் முறையாக ஆயிரத்தை கடந்த இறப்பு எண்ணிக்கை..!!

இந்தியாவில் 1,007 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளதுடன், இதுவரை 31,332 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 73 பேர் உயிரிழந்துள்ளனர், இது ஒரு நாளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய பாதிப்பாகும். இந்தியாவில், இதுவரை 7,696 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.டெல்லியில் ஒரு மத்திய பாதுகாப்பு படை வீரர் நேற்று கொரோனாவுக்கு பலியானார். இதைத் தொடர்ந்து கொரோனா பலி எண்ணிக்கை டெல்லியில் 47 ஆக உயர்ந்து உள்ளது.கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மகராஷ்ட்ரா மாநிலத்தில் 729 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.அந்த மாநிலத்தின் தொற்றாளர்களின் எண்ணிக்கை 9,318 ஐ தொட்டுள்ளது. மகராஷ்ராவில் அதன் அதிகபட்ச ஒரு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை 31 ஆக இருப்பதாகவும், மொத்தம் 400 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.