உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஓர் நல்ல செய்தி..விரைவில் விமான சேவைகளை ஆரம்பிக்கும் விமான நிறுவனம்..!!

இலங்கையின் முதன்மையான உள்நாட்டு விமான நிறுவனமான சினமன் எயார் , ஏப்ரல் முதலாம் திகதி முதல் தனது உள்நாட்டு பட்டய விமான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கவுள்ளது.கொவிட் தொற்றின் காரணமாக பல மாதகால இடைவெளிக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், ரத்மலானை விமான நிலையம் மற்றும் கொழும்பு நகரம் ஆகியவற்றிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு (பாசிக்குடா), ஹம்பாந்தோட்டை, தங்காலை,கோகல்ல, கண்டி, காஸ்டில்ரீக், சீகிரிய, யாழ்ப்பாணம், அறுகம்பை, அனுராதபுரம் மற்றும் பெந்தோட்டை ஆகிய பகுதிகளுக்கு இந்த விமான சேவை முன்னெடுக்கப்படுகிறது.விமான நிறுவனம் மிக உயர்ந்த பாதுகாப்பை வழங்க உறுதிபூண்டுள்ளதுடன், அனைத்து பயணிகளும் சுகாதார மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் வழிகாட்டுதல்களை அவசியம் கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.