யாழ்.திருநெல்வேலியில் முடக்கப்பட்ட பகுதிகளில் சிக்கித் தவிக்கும் 300 குடும்பங்கள்..!! அவசர உதவிகள் தேவை..!

யாழ்.திருநெல்வேலி வடக்கு பாற்பண்ணைப் பகுதி முடக்கப்பட்டிருக்கும் நிலையில் அப்பகுதி மக்களின் தேவைகள் தொடர்பாக ஆராய்ந்து வருவதாக நல்லுார் பிரதேச செயலக தகவல்கள் தொிவிக்கின்றன. குறித்த பகுதியில் சுமார் 800 குடும்பங்கள் வரையில் முடக்கப்பட்டிருக்கும் நிலையில் அண்ணளவாக 300 குடும்பங்களுக்கு அவசரமான உதவி தேவைப்படுவதாக குறிப்பிட்டிருக்கும் நல்லுர் பிரதேச செயலகம்,
வெளியிலிருந்து நன்கொடைகளை, உதவிகளை வழங்க விரும்புபவர்கள் பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டு அவற்றை வழங்கலாம் எனவும் கேட்கப்பட்டிருக்கின்றது.மேலும், முடக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள் 6 வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதர தேவை மதிப்பீடுகளை பிரதேச செயலகம் மேற்கொண்டு வருகின்றது எனவும் நல்லுார் பிரதேச செயலக அதிகாரிகள் கூறுகின்றனர்.