தற்போது கிடைத்த செய்தி..யாழ். நல்லூரில் தீ விபத்து..பற்றியெரிந்த கிட்டுப் பூங்கா..!!

யாழ்ப்பாணத்தில் உள்ள கிட்டுப் பூங்காவில் சற்று முன்னர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.தீப்பரவலுக்கான காரணம் தொடர்பில் எதுவும் தெரியவரவில்லை. யாழ்ப்பாணம் நல்லூர் முத்திரை சந்தி  பகுதியில் அமைந்துள்ள கிட்டுப்பூங்காவின் முகப்பு விஷமிகள் தீ வைத்தமையால் முகப்பு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

முகப்பு பகுதிக்கு விஷமிகள் தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர். முகப்பு பகுதி தீ பற்றி எரிவதனை கண்ணுற்றவர்கள், யாழ்.மாநகர சபை தீயணைப்பு பிரிவினருக்கு அறிவித்த போதிலும், அவர்கள் அச்சமயம் பிறிதொரு இடத்தில் சேவையில் ஈடுபட்டு இருந்தமையால், அப்பகுதிக்கு வருவதற்கு தாமதமாகியமையால் முகப்பு பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.

நேரடிக் காணொளியைப் பார்ப்பதற்கு இங்கே அழுத்துங்கள்..