வெளிநாடுகளிலிருந்து பணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்போருக்கு ஓர் மிக மகிழ்ச்சியான செய்தி!!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் பெறுமதி இன்று 201 ரூபாவைக் கடந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 201.60 ரூபாயாக பதிவாகியுள்ளதென மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை இன்றைய தினம் 196.72 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வரலாற்றில் முதல் முறையாக 201 ரூபாயை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.